FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இனி அமெரிக்காவிலும் தீபாவளி விடுமுறை நாள்!

நியூ யார்க் மாநிலத்தில் தீபாவளி நாளைப் பள்ளிகளுக்கான பொது விடுமுறையாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Updated On : 15 நவம்பர் 2023, 2:25 pm IST
நியூ யார்க் தீபாவளி கொண்டாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்
பகிர்:

அமெரிக்கா நாட்டின் நியூ யார்க் மாநில ஆளுநர் கேத்தலீன் ஹோக்கல், தீபாவளி அன்று நியூ யார்க்கில் உள்ள பொது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிற நியூ யார்க் மாகாணத்தில் இந்தியர்களின் விழாவான தீபாவளிக்கு விடுமுறை அறிவித்திருப்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாதக்கணக்கின்படி எட்டாவது மாதம் 15-ம் நாள் இந்த விடுமுறை அளிக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

உலகம் முழுவதும் உள்ள திருவிழாக்களை நமது மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கும் கொண்டாடுவதற்குமான வாய்ப்பாக இது அமையும் என ஹோக்கல் தெரிவித்துள்ளார்.

நியூ யார்க் மாகாணத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்காவின் பெரிய கல்வி மாகாணங்களில் நியூ யார்க்கும் ஒன்று.

அம்மாநில சட்டபேரவை உறுப்பினரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஜெனிஃபர் ராஜ்குமார் முன்னெடுத்த இந்த மசோதா தற்போது ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டமாக நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments