பிரிட்டன் பிரதமரின் கோரிக்கை!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலிய அதிபருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பின்போது பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார்.
``ஹமாஸின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களாகப் பாலஸ்தீன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை நாம், தொடர்ந்து அளிப்பது முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார் ரிஷி சுனக்.
அதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் தானும் இங்கிலாந்து அரசும் இஸ்ரேலிய மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இஸ்ரேல் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.