முகப்பு
உலகம்

கனடா துணைப் பிரதமர் ராஜிநாமா!

கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 16 டிசம்பர் 2024, 9:35 pm IST
கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் - படம் | எக்ஸ்
பகிர்:

கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுதிய கடிதத்தில், கனடாவின் வளர்ச்சிப் பாதையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசில் உயர்நிலை பொருளாதார ஆலோசகராக கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இருப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் கூறியுள்ளார்.

சமீபத்தில் கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் 250 கனடா டாலர்கள் காசோலை வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அதிக வரி விதிப்பு குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நாட்டின் நிதி வருவாயைக் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அவரது கடிதத்தில், ஃப்ரீலேண்ட் ‘டிரம்பின் அச்சுறுத்தலை மிகப்பெரிய சவால்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துணைப் பிரதமராக பதவி வகித்துவந்த ஃப்ரீலேண்ட், நீண்ட காலமாக ட்ரூடோவின் லிபரல் கட்சியில் மிக முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார். அவர் 2020 ஆம் ஆண்டு முதல் கனடாவின் நிதி அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

முன்னாள் நிதியமைச்சராக இருந்த பில் மோர்னோ அரசின் செலவினக் கொள்கைகள் தொடர்பாக ட்ரூடோவுடனான சர்ச்சையின் மத்தியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஃபிரீலேண்ட் கனடா நாடாளுமன்றத்தில் லிபரல் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும், கனடாவின் வரவிருக்கும் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.