உலகம்

பாலஸ்தீனம்: இதழியல் மாணவி சுட்டுக் கொலை

Din

பாலஸ்தீனத்தின் வடமேற்கு நகரமான ஜெனினில் அந்நாட்டைச் சோ்ந்த இதழியல் மாணவி ஷாதா அல்-சபாக் (22), சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஷாதா அல்-சபாக், பாலஸ்தீன பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா் எனக் குற்றஞ்சாட்டிய அவரது குடும்பத்தினா், ‘பாலஸ்தீன பாதுகாப்புப் படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிா்த்துப் போராடுவதற்கு பதிலாக தனது சொந்த மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் ஒடுக்குமுறை கருவிகளாக மாறிவிட்டன’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாலஸ்தீன பாதுகாப்புப் படையினா் மீது ஹமாஸ் குழுவும் குற்றஞ்சாட்டியது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பாலஸ்தீன பாதுகாப்புப் படையினா், இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனா்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஷாதா அல்-சபாக், கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தைச் சோ்ந்த ஒருவரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

குளிரால் குழந்தை உயிரிழப்பு: காஸாவில் பிறந்து 20 நாள்களே ஆன குழந்தை கடும் குளிரால் சமீபத்தில் உயிரிழந்தது.

இஸ்ரேல்-காஸா இடையே கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், குளிரால் உயிரிழக்கும் நான்காவது குழந்தை இதுவாகும்.

உறைபனியின்போது மறுவாழ்வுக் கூடாரங்களில் மக்கள் வசிப்பதால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT