FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடும், கடைசியாகக் கொண்டாடும் நாடும்!

புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடும், கடைசியாகக் கொண்டாடும் நாடும் பற்றி

Updated On : 31 டிசம்பர் 2024, 3:36 pm IST
புத்தாண்டு - Center-Center-Coimbatore
பகிர்:

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.

2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள்.

எல்லா ஆண்டும் ஒன்றுபோலவே இருந்தாலும், ஒவ்வொரு முறையும் புத்தாண்டை வரவேற்கத் தவறுவதில்லை மக்கள். பலரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது, விருந்து கேளிக்கை என கொண்டாடி மகிழ்வதும் உண்டு.

Advertisement

Advertisement

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது நியூ ஸிலாந்துதான். ஆனால், அதற்கு முன்பே, கிறிஸ்துமஸ் தீவு எனப்படும் கிரிபதி குடியரசு என்ற ஒரு சிறிய தீவில்தான் உலகிலேயே முதன் முதலில் புத்தாண்டு பிறக்கும். பிறகு, நியூ ஸிலாந்தின் சத்தம் தீவில் புத்தாண்டு பிறக்குமாம். அதன்பிறகுதான் நியூ ஸிலாந்தின் பிற பகுதிகளில் புத்தாண்டு பிறக்கிறது. அதாவது இந்திய நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கே இங்கு புத்தாண்டு பிறந்துவிடுகிறது. நியூ ஸிலாந்தில் இன்று மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்துவிடுகிறது.

உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஆடித் திளைத்து சற்று ஓய்வெடுக்கும்போதுதான் பேக்கர் தீவு மற்றும் ஹாலந்து தீவுகளில் புத்தாண்டு பிறந்திருக்குமாம். ஹவாய் தீவுகளின் தென்மேற்குப் பகுதியில் இந்த தீவுகள் அமைந்துள்ளன. இங்குதான் கடைசியாக புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் வாழ்த்துகளும் கடைசியாகக் கேட்டு முடியும். அப்போது உலகமே அடுத்த நாளை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கும். அதாவது இந்தத் தீவுப் பகுதிகளுக்கு புத்தாண்டு பிறக்கும்போது இந்திய நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியாகியிருக்குமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments