முகப்பு
உலகம்

அரிசோனாவிலும் டிரம்ப் வெற்றி! 312 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்ற டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு...

Updated On : 10 நவம்பர், 2024 at 1:25 PM
வாக்கு எண்ணும் பணி - AP
பகிர்:

இழுபறி நிலைமை நீடிக்குமென கணிக்கப்பட்ட அரிசோணா மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உள்ள 535 எம்.பி.க்கள், கொலம்பியா மாவட்டத்துக்கு கீழவையில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அந்த மாவட்டம் சாா்பாக தனியாக 3 பிரதிநிதிகள் என 50 மாகாணங்களில் மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவா். 538 பிரதிநிதிகளில் பாதிக்கும் மேற்பட்டவா்களான 270 பேரின் வாக்குகளை எந்த வேட்பாளா் பெறுகிறாரோ, அந்த வேட்பாளரே அதிபா் தோ்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா்.

பொதுவாக அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு அந்த மாகாணங்களில் உள்ள அனைத்துப் பிரதிநிதிகள் வாக்குகளும் வழங்கப்படும்.

அந்த வகையில், டிரம்ப்புக்கு பொதுமக்களின் 74.6 மில்லியன்(7.46 கோடி) வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்த வாக்குகளில் 50.5 சதவீதமாகும். இதன்மூலம், அவருக்கு 312 பிரதிநிதிகள் வாக்குகள் கிடைத்துள்ளன.

கமல ஹாரிஸுக்கு 70.9(7.09 கோடி) வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்த வாக்குகளில் 48 சதவீதமாகும். அவருக்கு 226 பிரதிநிதிகள் வாக்குகள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.