FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உக்ரைனில் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்: மின் சேவை கடும் பாதிப்பு!

உக்ரைன் மீது ரஷியா மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்

17 நவம்பர் 2024, 3:50 pm
- AP
பகிர்:

உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன.

உக்ரைனில் நிகழ்த்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல்கள் குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிகா கூறியுள்ளதாவது, “உக்ரைனில் வான்வழித் தாக்குதல்கள் மிகப்பெரியளவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

அமைதியான நகரங்களில் இரவு வேளையில் டிரோன்கள், ஏவுகணைகள் ஏவி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்ளிட்ட கிழக்கத்திய 3 பிராந்தியங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.