முகப்பு
உலகம்

ரஷிய அதிபர் புதினுக்கு ரகசியமாக இரு மகன்கள்: வெளியானது மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை!

விளாதிமீர் புதினின் இரண்டு மகன்களும் மறைந்து வாழ்ந்து வருவதாக ரஷிய புலனாய்வு இதழியல் தளம் தகவல்

Updated On : 7 செப்டம்பர், 2024 at 12:24 PM
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 7 செப்டம்பர், 2024 at 11:21 AM

விளாதிமீர் புதினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருவதாக ரஷிய புலனாய்வு இதழியல் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தனது இரண்டு மகன்களையும் பல ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும், அவர்களின் இருப்பை பாதுகாக்கப்பட்ட அரசு ரகசியமாக கருதுவதாகவும் ரஷிய புலனாய்வு இதழியல் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதழியலில் கூறியிருப்பதாவது,

ரகசிய மகன்கள்

Advertisement

முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் வீராங்கனையான அலினா கபேவாவுக்கும் புதினுக்குமாக பிறந்த இரண்டு ரகசிய மகன்கள் உள்ளனர். இவான் என்ற பெயரில் 9 வயதில் ஒரு மகனும், 5 வயதில் விளாதிமீர் ஜூனியரும் ஆடம்பரமான தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை பின்னிரவு மட்டுமே பார்க்கிறார்கள்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 11:35 AM

மருத்துவரின் நிலை?

கபேவா 2015 ஆம் ஆண்டில் ஒரு தனியார் சுவிஸ் மருத்துவமனையில் இவானைப் பெற்றெடுத்தார்; விளாதிமீர் ஜூனியரை 2019 இல் மாஸ்கோவில் பெற்றெடுத்தார். அவர்களின் பிறந்த தேதிகள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில், இருவர் பிறப்பின்போதும் உடனிருந்த ரஷியாவைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் கடந்தாண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ஆடம்பரமான தனிமை

அவர்கள் மூவரும் மாஸ்கோவின் வடமேற்கில் உள்ள வால்டாய் ஏரிக்கு அருகே பாதுகாக்கப்பட்ட மாளிகையில், கிரெம்ளினின் ஃபெடரல் பாதுகாப்பு சேவையின் பாதுகாப்பில் வசிக்கின்றனர். அவர்கள் இருவரும் மழலையர் பள்ளிகளுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ செல்வதில்லை; மாறாக, அவர்கள் மாளிகையிலேயே பணியமர்த்தப்பட்ட பயிற்சியாளர்களால் கற்பிக்கப்படுகிறார்கள்.

அவர்களிடம் அதிகளவில் பொம்மைகளும் செல்லப்பிராணிகளும் இருந்தாலும், ஒருவருக்கொருவர் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் மட்டுமே விளையாட முடியும்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 11:36 AM

தங்கள் கோடைகாலத்தை பின்லாந்து வளைகுடா, கருங்கடல் கடற்கரையில் உள்ள ஆடம்பரக் கப்பல்களில், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மட்டும்தான் செலவிடுகிறார்கள்.

அவர்களுக்கென பிரத்யேகமான தனியார் ஜெட் அல்லது கவசப்படுத்தப்பட்ட ரயில் மூலம் பயணிப்பர்.

புதின் சில நேரங்களில், தனது மூத்த மகனுடன் வால்டாய் தோட்டத்தில் ஒரு தனியார் வளையத்தில் ஐஸ் ஹாக்கி விளையாடுவதாகவும் கூறப்படுகிறது.

நம்பகத்தன்மையுள்ள பணியாளர்கள்

ரஷியாவுக்கு அனுதாபம் கொண்ட நாடுகளில் இருந்து மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அங்கு பணிபுரியவிருக்கும் ஊழியர்கள் தனிமையில் வாழ்தல், வேலையைத் தொடங்குவதற்கு முன்பு இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 11:36 AM

ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தனிப்பட்ட பயிற்சியாளர்களுடன் தனியார் உடற்பயிற்சி வசதிகள், நீச்சல் குளங்கள் முதலான வசதிகள் உள்ளது. தனிப்பட்ட சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்ட உணவு, நம்பகத்தன்மையான பணியாளர்களால் வழங்கப்படுகிறது.

அவர்கள் பனிச்சறுக்கு கற்றலுடன் கூடுதலாக ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அரசு பாதுகாப்பின்கீழ்

ரஷிய புலனாய்விடம் இவானின் படங்கள் இருந்தாலும், பாதுகாப்பு நெறிமுறை காரணங்களுக்காக அவற்றை வெளியிட வேண்டாம் என்று கூறியது. புதினின் மகன்கள் அரசின் தரவுத்தளங்களில் பட்டியலிடப்படவில்லை.

பொதுவாக உளவாளிகள் மற்றும் அரசாங்க பாதுகாப்பு கொண்ட நபர்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு ஆவணங்கள், புதினின் மகன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.