FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி வாக்குறுதி!

இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும்! -பிரதமர் மோடி

5 ஏப்ரல் 2025, 8:18 pm
- பிரதமர் மோடி பதிவு
பகிர்:

இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.

தாய்லாந்தில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பின்னா் அங்கிருந்து இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றடைந்தாா். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் அநுர குமார திசாநாயக மற்றும் பிரதமா் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சனிக்கிழமை (ஏப்.5) சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமது இலங்கை பயணம் குறித்து பல்வேறு பதிவுகளை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் பிரதமர் மோடி, அதில், இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களைப்(ஐஓடி) பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைச் சந்தித்திருப்பது பயனளிப்பதாக அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சமூகமானது இரு நாடுகளுக்குமிடையில் உயிர்ப் பாலமாக விளங்குகின்றது.

இச்சமூகத்துக்கு பலனளிக்கும் விதமாக பத்தாயிரம் வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள், புனிதத் தலமான சீதா எலியா கோயில் மற்றும் பிற சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை இலங்கை அரசுடன் இணைந்து கட்டமைக்க இந்தியா ஆதரவு நல்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவிப்பதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.