முகப்பு
உலகம்

அமெரிக்கா: விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 20 ஏப்ரல், 2025 at 3:11 AM
பிரதிப் படம்
பகிர்:

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தினால், விமானத்தில் பயணித்த இரு பெண்களும், இரு ஆண்களும் என நால்வரும் உயிரிழந்தனர். இருப்பினும், விபத்து குறித்த மேற்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

விபத்து குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →