முகப்பு
உலகம்

எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!

எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய சிக்கல்...

Updated On : 5 பிப்ரவரி 2025, 12:35 pm IST
டொனால்டு டிரம்ப் - கோப்புப்படம்
பகிர்:

எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 540 நாள்களாக அதிகரித்து பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஜோ பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி மற்றும் ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

”பைடன் அரசின் 540 நாள்கள் கால நீட்டிப்பு ஆபத்தான முடிவு. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிப்பது காவல்துறைக்கு சவாலானதாக மாறிவிடும்.

நமது குடியேற்றச் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவும் பைடன் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் ஜான் கென்னடி குறிப்பிட்டுள்ளார்.

எச்-1பி, எல்-1 விசா என்றால் என்ன?

எச்-1பி விசா: தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் நிதி போன்ற சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது.

எச்-4 விசா: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் இணையர் மற்றும் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு வழங்கப்படுகிறது.

எல்-1 விசா: பன்னாட்டு நிறுவனங்களின் வெளிநாடுகளில் உள்ள தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவில் உள்ள கிளைக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

எல்-2 விசா: எல்-1 விசா வைத்திருப்பவர்களை சார்ந்திருப்பவர்கள் இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியவும், படிக்கவும் அனுமதிக்கிறது.

இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

2023 தரவுகளின்படி, இந்தியாவைச் சேர்ந்த 76,671 பேர் எல்-1 விசாவும், 83,277 பேர் எல்-2 விசாவும் வைத்துள்ளனர். அதேபோல், அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள மொத்த எச்-1பி விசாக்களின் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாக்களில் அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments