காயமடைந்த பெண்.  
உலகம்

பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்

பிரேசிலில் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

DIN

பிரேசிலில் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

பிரேசிலின் அனபோலிஸ் நகரில் பெண் ஒருவர் தனது கணவருடன் உள்ளூர் மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவரது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட்போன் மொபைல் போன் திடீரென வெடித்தது.

உடனே அருகிலிருந்த அவரது கணவர் தீயை அணைத்தார். இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு கை, முன்கை, முதுகு மற்றும் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்

பிறகு காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தனது மனைவிக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக அவரது கணவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பின் பாக்கெட்டுகளில் மொபைல் போனை எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பலர் எச்சரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT