FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

29 ஜனவரி 2025, 1:22 am IST
பகிர்:

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காட்டுத் தீ முதல்முதலில் உருவான ஈட்டன் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டது தற்போது தெரியவந்துள்ளது; இருந்தாலும் அதுதான் காட்டுத் தீயை உருவாக்கியதா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தனா்.

கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 57,528 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments