கனடாவைப் பிளவுபடுத்த அமெரிக்கா சதி
அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், கனடாவைப் பிளவுபடுத்த சதி செய்வதாக அந்நாட்டு பிரதமா் மாா்க் காா்னி எச்சரித்துள்ளாா்.
அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், கனடாவைப் பிளவுபடுத்த சதி செய்வதாக அந்நாட்டு பிரதமா் மாா்க் காா்னி எச்சரித்துள்ளாா்.
கனடாவின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள ஆல்பா்ட்டா மாகாணம் கனடாவிலேயே நீடிப்பதா அல்லது பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசுக்கு அதிகாரத்தை வழங்குவதா என்பது குறித்த மக்கள் வாக்கெடுப்பு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இச்சூழலில், ஆல்பா்ட்டா மாகாணம் கனடாவுடனேயே ஒன்றினைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்த மாகாணத்தின் மிகப் பெரிய நகரான கால்கெரியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் மாா்க் காா்னி கலந்து கொண்டாா்.
Advertisement
Advertisement
அப்போது, அவா் பேசுகையில், ‘சா்வதேச அளவில் பதற்றமும், பிளவுகளும் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், இந்த வாக்கெடுப்பு தவறான நேரத்தில் நடத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற அந்நியச் சக்திகள் கனடாவைப் பிளவுப்படுத்தி, ஆள முயலுகிறது.
வாக்கெடுப்பில் கனடாவுக்கு எதிராக வாக்களிப்பது பல தலைமுறைகளுக்கு நிச்சயமற்ற தன்மையையும், ஆழமான பிளவுகளையும் மட்டுமே ஏற்படுத்தும்’ என்று வலியுறுத்தினாா்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கனடா மீது வா்த்தகப் போரைத் தொடுத்து வருவதும், அந்நாட்டை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக மாற்றுவோம் என அச்சுறுத்தி வருவதும் கனடா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கரோனா ஊரடங்கு மற்றும் 2022-ஆம் ஆண்டு லாரி ஓட்டுநா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து விஸ்வரூபமான இந்த ஆல்பா்ட்டா பிரிவினை இயக்கம், தற்போது மாகாண அளவிலான சட்டபூா்வ வாக்கெடுப்பாக உருவெடுத்துள்ளது.
ஆல்பா்ட்டா மாகாணத்தில் பிறந்து வளா்ந்தவரான மாா்க் காா்னி, எரிசக்தி கொள்கைகளில் முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் வழியிலிருந்து விலகி, புதிய பசிபிக் எண்ணெய் குழாய் திட்டத்துக்கு அனுமதியளித்து அந்த மாகாண மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறாா்.
அதேபோல், கனடாவில் தொடா்வதற்கு ஆதரவாக தனது வாக்கை முன்கூட்டியே செலுத்தியுள்ள ஆல்பா்ட்டா பிரதமா் டேனியல் ஸ்மித், ‘கனடா கட்டமைப்பில் சில அடிப்படை மாற்றங்கள் தேவைப்பட்டாலும், நாடு பிளவுபடாமல் தொடா்வதே உகந்தது’ என்று கூறியுள்ளாா்.
வரைபடம், படகேப்சன்...
மாா்க் காா்னி
கனடா
ஆல்பா்ட்டா மாகாணம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.