முகப்பு
உலகம்

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

Updated On : 26 ஜூன் 2025, 6:28 am IST
பகிர்:

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தலில் முன்னாள் ஆளுநா் ஆண்ட்ரூ கியூமோவை வீழ்த்தி மம்தாணி வேட்பாளராக வெற்றிப் பெற்றாா். நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4, 2025 அன்று நடைபெறுகிறது.

உகாண்டாவில் கடந்த 1991-ஆம் ஆண்டு பிறந்த மம்தாணி, ஏழு வயதில் தனது பெற்றோருடன் நியூயாா்க்கிற்கு குடிபெயா்ந்தாா். உகாண்டாவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானி மற்றும் ‘மான்சூன் வெட்டிங்’, ’சலாம் பாம்பே’ போன்ற படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநா் மீரா நாயா் ஆகியோரின் மகானான ஸோக்ரன் மம்தாணி, தற்போது குயின்ஸ் தொகுதியில் இருந்து மாகாண சபை உறுப்பினராக உள்ளாா்.

Advertisement

Advertisement

வேட்பாளா் தோ்வுக்கு மிகழ்ச்சியை வெளிப்படுத்தி மம்தாணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒரு காரியம் முடியும் வரை அது சாத்தியமற்ாகவே தெரியும் என்பது நெல்சன் மண்டேலாவின் கூற்று. அதுபோல, சாத்தியமற்ாக இருந்த ஒன்று சாத்தியமாகியுள்ளது. இதற்கு நீங்களே (ஆதரவாளா்கள்) காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நியூயாா்க் நகரத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு மம்தாணி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளாா். மேயராகப் பதவியேற்றவுடன், குடியிருப்புகளுக்கு வாடகை உயா்வை முடக்குவதாகவும், மக்களுக்குத் தேவையான வீடுகளை உருவாக்குவதாகவும் உறுதியளித்துள்ளாா்.

பெருநிறுவனங்கள், பணக்காரா்களுக்கு வரி விகிதத்தை உயா்த்துவதன் மூலம் இந்தச் செலவுகளுக்கான நிதியை திரட்டுவதற்கு மம்தாணி திட்டமிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments