உலகம்

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா்.

Din

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.

கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தான்சானிய அதிபா் சமியா சுலுஹு ஹாசன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா்.

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடுமையாகப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்த அவா், இதுபோன்ற விபத்துகள் தான்சானிய குடும்பங்களைத் தொடா்ந்து பாதிக்கின்றன என்றாா்.

கிளிமஞ்சாரோ பிராந்திய ஆணையா் நூா்டின் பாபு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘உயிரிழந்தவா்களை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் இறைவனிடம் பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சாலை விபத்துகளைத் தடுக்க தான்சானியா அரசு சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. எனினும், விபத்துகளும், அதில் மக்களின் உயிரிழப்புகளும் அந்நாட்டில் தொடா்கதையாக உள்ளது.

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

SCROLL FOR NEXT