கோப்புப் படம் 
உலகம்

4 படகுகள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 186 பேர் மாயம்!

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் மாயம்; ஆப்ரிக்காவில் 2 படகுகள் விபத்தானதில் 2 பேர் பலி

DIN

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டில், வியாழக்கிழமை 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உள்பட 5 பணியாளர்களும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலும் வேறு 2 படகுகளும் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், படகில் பயணித்த மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியிலிருந்து ஏமன் நாட்டுக்கு செங்கடல் - ஏடன் வளைகுடா பகுதியாகச் சென்றவர்களில் 558 பேர் பலியானதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT