முகப்பு
உலகம்

அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்

ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரிவிதிக்கப்படும் - டிரம்ப்

Updated On : 13 மார்ச் 2025, 7:24 pm IST
டிரம்ப்..
பகிர்:

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த வரிவிதிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்ட 50 சதவிகித வரியை விதித்தால், தனது வர்த்தகப் போரில் வரி அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

Advertisement

Advertisement

இந்த வரியை உடனடியாக நீக்கப்படாவிட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து ஒயின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருள்கள் மீது 200% வரி விதிக்கப்படும் என்றார்.

இந்த அதிகப்படியான வரிவிதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments