FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய பொருள்கள் மீது 100% வரி: டொனால்ட் டிரம்ப் கையெழுத்து

இந்திய பொருள்கள் மீது 100% வரி விதிக்கும் சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்

19 செப்டம்பர் 2026, 1:43 pm IST
டொனால்ட் டிரம்ப் - ians
பகிர்:

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் அதிகாரமளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு சட்டமாக்கினார்.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இந்த மசோதா கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று கீழவையிலும் (பிரதிநிதிகள் அவை) நிறைவேற்றப்பட்டு, இன்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டதன் மூலம், இந்த மசோதா சட்டமாகியிருக்கிறது.

இந்த சட்டத்தால் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது 100 சதவிகித வரி விதிக்க முடியும், ஈரான் மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடையையும் டிரம்ப்பால் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

உக்ரைன் - ரஷியா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போா் நீடிக்கிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவி உள்ளிட்டவற்றை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அளித்து வருகின்றன. மேலும், ரஷியாவுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி அளிக்கும் வகையில் பல்வேறு தடைகளையும் அந்த நாடுகள் விதித்துள்ளன. ரஷியாவின் பொருளாதாரத்துக்குப் பெரும் ஆதாரமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி வா்த்தகமே திகழ்கிறது. இதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அதேநேரத்தில் மேற்காசியாவில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போா் நடப்பதால் கச்சா எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிகமாக அமெரிக்கா அனுமதியளித்தது.

இந்தச் சூழ்நிலையில், ரஷியா மீதும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் 100 சதவீத வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, அதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பிரதிநிதிகள் அவையில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தால் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப்பின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிபர் டிரம்ப் மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கியிருக்கிறார்.

இனி என்னவாகும்?

தற்போது லிண்ட்சே ஓ கிரஹாம் மசோதா சட்டமான நிலையில், ரஷிய தலைமை (அதிபா்), ரஷிய எரிசக்தித் துறை மீதும், ரஷியாவால் மறைமுகமாக கச்சா எண்ணெய் வா்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் கப்பல்கள் மீதும் டிரம்ப்பால் தடை விதிக்க முடியும்.

அதுமட்டுமன்றி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் மீது 100 சதவீத வரியும், ஈரான் மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடையையும் டிரம்ப்பால் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

100% tariff on Indian goods: Donald Trump signs order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments