தெற்கு காஸாவில் வான்வழித் தாக்குதல்: 54 பேர் பலி!
கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்..
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் போர் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் புதன்கிழமை இரவு நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலியான ஏராளமான உடல்கள் நகரின் நாசர் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கான் யூனிஸில் உள்ள அசோசியேட் பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலில் பலரின் உடல்கள் துண்டுதுண்டுகளாக சிதையுண்டதாகவும், சிலரின் உடல்கள் பைகளில் அடைத்து கொண்டுவரப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்தது. மொத்தம் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது.
வடக்கு மற்றும் தெற்கு காஸாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 24 குழந்தைகள் உள்பட மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்குச் சென்றதாகவும், ஆனால் இஸ்ரேலுக்கு வருகை தரவில்லை என்றும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் இஸ்ரேல் வருகை ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என மக்களிடையே பரவலான நம்பிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.