இருளுக்கு மத்தியில் நியூ யார்க்கில் ஒளி: அரங்கை அதிரவிட்ட மம்தானி பேச்சு!
அதிபர் டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும் என்று நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியான ஸோரான் மம்தானி வெற்றிபெற்ற நிலையில், பொதுமக்களின் முன்பாக வெற்றியுரை ஆற்றினார்.
இந்த உரையின்போது, ஸோரான் மம்தானி ``டிரம்ப் அவர்களே, எனது வெற்றியுரையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களிடம் சொல்வதற்கு சில உள்ளன. ஆகையால், காணொலியின் ஒலியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Advertisement
Advertisement
டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட நகரமே, அவரை தோற்கடித்தது. இருள் நிறைந்த அரசியலுக்கு மத்தியில், நியூ யார்க் ஒளியாக இருக்கும்’’ என்று பேசினார்.
இந்த உரையின்போது, `ஸோரான், ஸோரான்’ என்று அரங்கத்திலிருந்தோர் கோஷமிட்டதையும் சுட்டிக் காட்டினார், ஸோரான் மம்தானி.
மம்தானி கூறியதுபோலவே, ட்ரூத் சோசியல் சமூக வலைத்தளத்தில் `இப்படித்தான் அது தொடங்கும்’ என்று டிரம்ப் பதிவிட்டார்.
இதையும் படிக்க: வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!
Zohran Mamdani's words for Trump in electric victory speech
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.