இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏபி
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் இன்று எகிப்தில் பேச்சுவாா்த்தை!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் திங்கள்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் திங்கள்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்தாா்.

அந்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து, காஸாவில் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனா்கள் மற்றும் காஸா மக்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டு அதன் முதல்கட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவாா்த்தை எகிப்து நாட்டில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பாா் என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஸாவில் 2023, அக். 7-ஆம் தேதி போா் தொடங்கி இரண்டு ஆண்டுகளை நெருங்கிவரும் நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT