முகப்பு
உலகம்

2025-க்கான இபி-1 கிரீன் கார்டு விசா முடிந்தது: அமெரிக்கா

இபி-2 விசா கட்டுப்பாட்டைத் தொடர்ந்து இபி-1 கிரீன் கார்டு வழங்கல் முடிந்தது தொடர்பாக...

Updated On : 9 செப்டம்பர் 2025, 6:22 pm IST
அமெரிக்க அதிபர்
பகிர்:

வெளிநாடுகளிலிருந்து அதிதிறன் பெற்ற ஊழியர்கள், அமெரிக்கா செல்வதற்கு மேலும் ஒரு தடைக்கல்லை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட முன்னுரிமை (இபி-1) கிரீன் கார்டு வழங்கும் எண்ணிக்கை முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது முன்னுரிமை (இபி-2) விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட நிலையில், இபி-1 கிரீன் கார்டு வழங்குவதற்கான கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்பினால், நடப்பு ஆண்டில், இபி-1 மற்றும் இபி-2 விசா பிரிவின் கீழ் யாருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும், இதற்கான காலம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விசா விண்ணப்பங்கள் 2025 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால், இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், இபி-1 கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதிக காலம் காத்திருப்பவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

எனவே, அக்டோபர் 1ஆம் தேதி இபி-1 மற்றும் இபி-2 விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முன்னதாக சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பரிசீலிக்கப்பட்டாலும், அவர்கள் விண்ணப்பித்த இடங்களுக்கு ஏற்ப அது வரிசைப்படுத்தப்படும்.

இந்த விசாவுக்கான முன்னுரிமை தேதியை அடிப்படையாகக் கொண்டே இதன் தகுதியும் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments