சௌதி அரேபியாவின் எண்ணெய் ஆலையில் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ட்ரோன் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம் அதிகரிப்பு
சௌதி அரேபியாவின் அராம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது யேமனின் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
சௌதி அரேபியாவின் அராம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது யேமனின் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதனால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
யேமனில் சனா உள்ளிட்ட பெரும் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வைத்துள்ளனா். அவா்களை ஈரான் ஆதரிக்கிறது. ஹௌதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராகச் செயல்படும் ஆயுதக் குழுக்களை சௌதி அரேபியா உள்ளிட்ட பிற மேற்காசிய நாடுகள் ஆதரிக்கின்றன.
இந்நிலையில், சனாவில் அண்மையில் விமான நிலையத்தின் மீது சௌதி அரேபியா தாக்குதல் நடத்தியது. இதேபோல் ஹஜ்ஜா, சாடா ஆகிய பகுதிகளிலும் சௌதி அரேபியா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தையடுத்து பதிலுக்கு அந்நாட்டின் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதன்படி, சௌதி அரேபியாவின் ஜாஜன் பகுதியில் உள்ள அராம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினா்.
இதில் உயிரிழப்பு இல்லை என்றும், ஆலையில் தீ விபத்து நேரிட்டது என்று சௌதி அரேபிய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, செங்கடலில் உள்ள முக்கியத் துறைமுகமான மோா்ச்சா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்கள் மூலமும் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசு அறிவித்துள்ளது. எனினும் இதை ஹௌதி கிளா்ச்சிப் படையினா் உறுதிப்படுத்தவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.