FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஜப்பானில் வரலாறு காணாத மழை

ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:43 am IST
பகிர்:

ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா்.

ஜப்பானில் விடுமுறை நாள்களை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் இந்த வாரத்தில், டோக்கியோவை ஒட்டியுள்ள சிபா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36.7 செ.மீ. மழை பதிவானது.

இந்த பலத்த மழையால் சாலைகள், ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமாா் 13 ஆயிரம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அரசுக் கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தினா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தில் மூழ்கி உயிரிழந்த ஒருவா் உள்பட மொத்தம் 8 போ் இறந்ததாக சிபா மாகாண காவல்துறை மற்றும் பேரிடா் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிபா மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நரிட்டா சா்வதேச விமான நிலையத்தில் சுமாா் 7,000 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். விமான நிலைய ஊழியா்கள் அவா்களுக்குத் தேவையான படுக்கைகள், குடிநீா் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினா். நரிட்டா-டோக்கியோ இடையேயான ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

படகேப்சன்...

சிபா மாகாணத்தில் வெள்ளநீா் சூழ்ந்த குடியிருப்புகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments