FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுக்கு மட்டுமே திறக்கும்! டிரம்ப்பின் பேச்சுக்குப் பதிலடி!

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுக்கு மட்டுமே திறக்கும் என அதிபர் டிரம்ப்புக்கு ஈரானிய அரசு பதிலடி...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:02 pm IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஈரானிய அமைச்சர் காசெம் கரிபாபாதி - கோப்புப் படம் | எக்ஸ்
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுத் திறக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகக் கைப்பற்றி விரைவில் அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஆக. 14) கூறியுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி, ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுத் திறக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது, ஈரானிடம் உள்ளது, ஈரானிடமே நிலைத்திருக்கும்.

இந்த நீரிணை ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுத் திறக்கப்படும். நீங்கள் உங்கள் தோல்வியை ஏற்று உங்களின் கற்பனைகளைக் கைவிடும் வரையில் ஈரான் முடக்கத்தைத் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் உடனான போரின் முதல் இலக்கு ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றி கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Iranian Foreign Ministry has stated that the Strait of Hormuz will be closed and opened solely based on Iran's orders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments