FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வீட்டின் சுவரை இடித்தபோது கொட்டிய ரூ.98 கோடி தங்க நாணயங்கள், கட்டிகள்.. இதுதான் புதையலா?

வீட்டின் சுவரை இடித்தபோது கொட்டிய ரூ.98 கோடி தங்க நாணயங்கள், கட்டிகள் யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் நடந்து வருகிறது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:34 pm IST
தங்கக் கட்டிகள் - பிரதி படம் - ANI
பகிர்:

பெல்ஜியம் நாட்டின் பிரஸெல்ஸ் நகரில் ஒரு வீட்டை சீரமைப்பு செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், வீட்டின் சுவரை இடித்தபோது அதிலிருந்து செங்கலாகக் கொட்டும் என்று நினைத்தால், கொட்டியது தங்க நாணயங்களும், தங்கக் கட்டிகளும், தங்கக் குச்சிகளும்.

எப்போதும், கல், தூசுகளுக்கு இடையே பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், திடீரென தங்கக் கட்டிகளும், தங்க நாணயங்களும் கொட்டியதால், அதிர்ச்சி அடைந்தனர்.

கல்லூரியில் படித்துக் கொண்டே நண்பர்களுடன் பகுதி நேரமாக சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 18 வயது இளைஞர், இந்த தங்க நாணயங்கள், கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது என்ன புதையலா?

கடந்த 19ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய பங்களாவுக்குள், ஒரு பாதுகாப்பான பையில், இந்த தங்க நாணயங்கள், கட்டிகள் பத்திரமாக ஒரு சுவருக்குள் அறை போன்ற அமைப்பை உருவாக்கி அதற்குள் இந்த வீட்டின் உரிமையாளர் மறைத்து வைத்திருந்துள்ளார்.

அதுதான் தற்போது புதையலாகக் கடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இது குறித்துத் தகவல் அறிந்ததும், அந்த நாட்டின் கருவூலத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, தங்கக் கட்டிகள், நாணயங்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நாணயங்கள் யாருக்குச் சொந்தம்? கண்டுபிடித்த இளைஞர்களுக்கா? அந்த வீட்டின் உரிமையாளருக்கா? அல்லது அரசுக்கா என்ற விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த வீட்டை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே, தகவல் கிடைத்ததும் ஏராளமான உள்ளூர் மக்கள் அங்கு தங்களுக்கும் ஏதேனும் புதையல் கிடைக்குமா என்ற ஆசையில் அவ்விடம் சென்று தேட நினைப்பவர்களுக்கு, முழுமையாக அந்த இடத்தை சோதித்து அங்கு எதுவும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments