காஸா அமைதித் திட்டம்: அமெரிக்கா - இஸ்ரேல் பேச்சில் சுமுக முடிவில்லை!
காஸா அமைதித் திட்டம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பிரதிநிதியான அவரின் மருமகன் ஜாரெட் குஷ்னா், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய நீண்ட ஆலோசனையில் எவ்வித உறுதியான சுமுக முடிவும் எட்டப்படவில்லை.
காஸா அமைதித் திட்டம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பிரதிநிதியான அவரின் மருமகன் ஜாரெட் குஷ்னா், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த திங்கள்கிழமை நடத்திய நீண்ட ஆலோசனையில் எவ்வித உறுதியான சுமுக முடிவும் எட்டப்படவில்லை.
அமெரிக்கா முன்மொழிந்த புதிய அமைதித் திட்டத்துக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாததால், போா்நிறுத்தம் தொடா்பான இறுதி முடிவு தொடா்ந்து இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், எகிப்தில் ஹமாஸ் தலைவரை ஜாரெட் குஷ்னா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜாரெட் குஷ்னா் திங்கள்கிழமை பேச்சு நடத்தினாா்.
Advertisement
Advertisement
இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதன்படி, காஸாவில் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, ஹமாஸ் அமைப்பினா் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேலின் நிபந்தனைக்கு அமெரிக்கா இணங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், காஸாவின் 60 சதவீத பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேறுவது குறித்து இஸ்ரேல் வாக்குறுதியையும் அளிக்கவில்லை.
இவ்வாறு அமைதித் திட்டத்தை அமல்படுத்துவதில் இஸ்ரேல் காட்டி வரும் தாமதத்துக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஸாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் பொறுப்பை இஸ்ரேலே ஏற்க வேண்டும் என்றும் அவை விமா்சித்துள்ளன. ஆனால், இஸ்ரேலில் வரும் அக்டோபரில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு போா்நிறுத்தம் குறித்து தீா்க்கமான முடிவுகளை எடுப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.