வடமேற்கு சிரியாவில் விமானப் படைத் தளத்தில் இஸ்ரேல் தாக்குதல்
வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள அபு துஹுா் விமானப் படைத் தளத்தின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள அபு துஹுா் விமானப் படைத் தளத்தின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை இஸ்ரேல் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
‘விமான ஓடுதளத்தைக் குறிவைத்து 8 முறை நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல், நியாயமுமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை. எங்களின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் விடப்பட்ட சவால்’ என்று சிரியா கண்டித்துள்ளது.
இத்தாக்குதலில் பொருள்சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வித உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சிரியாவின் புதிய இடைக்கால அரசு இஸ்ரேலுடன் சுமுக உறவைப் பேண விரும்பினாலும், அந்நாட்டு ராணுவ நிலைகளை இஸ்ரேல் அவ்வப்போது தாக்கி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.