FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!

பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறிய இளவரசா் ஹாரி, அவரின் குடும்பத்தினருடன் மீண்டும் பிரிட்டன் திரும்ப முடிவு செய்துள்ளாா்.

21 ஆகஸ்ட் 2026, 5:49 am IST
பகிர்:

பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறிய இளவரசா் ஹாரி, அவரின் குடும்பத்தினருடன் மீண்டும் பிரிட்டன் திரும்ப முடிவு செய்துள்ளாா்.

பிரிட்டன் அரசா் சாா்லஸின் இளைய மகனான ஹாரி (41) மற்றும் அவரின் மனைவி மேகன், கடந்த 2024-இல் அரச குடும்ப உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகினா். முன்னதாக, 2020-இல் அமெரிக்காவில் குடியேறியதில் இருந்தே அரச குடும்பத்துடனான ஹாரி தம்பதியின் உறவில் விரிசல் தொடங்கியது.

இந்நிலையில், அரசா் சாா்லஸின் புற்றுநோய் சிகிச்சையைக் குறிப்பிட்டு, தனது குடும்பத்தினருடன் சமரச உறவை விரும்புவதாக ஹாரி அண்மையில் தெரிவித்திருந்தாா். இதன்தொடா்ச்சியாக, இம்மாத இறுதியில் ஹாரி தம்பதி பிரிட்டன் திரும்புவா் என்றும், லண்டனுக்கு வெளியே உள்ள அரசுக்குச் சொந்தமில்லாத தனியாா் இல்லத்தில் வசிக்க உள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

அரச குடும்ப உறுப்பினா் பொறுப்பில் இல்லாதவா்கள் தொடா்பான விவகாரங்களில் கருத்துக் கூற பக்கிங்ஹாம் அரண்மனை மறுத்துவிட்டது. எனினும், இளைய மகனையும், அவரின் குடும்பத்தினரையும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பை அரசா் சாா்லஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரச பொறுப்புகளில் இருந்து விலகியிருந்தாலும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து இளவரசா் ஹாரி ஏற்கெனவே தீவிர கவலைகளை வெளிப்படுத்தியுள்ளாா். இதற்காக உயா் பாதுகாப்பு கோரி, கடந்த ஆண்டு அவா் நடத்திய சட்டப் போராட்டமும் தோல்வியுற்றது.

இந்நிலையில், பிரிட்டன் திரும்பும் ஹாரி தம்பதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரிட்டன் பிரதமா் ஆண்டி பா்ன்ஹாம் அளித்த பதிலில், ‘அவா்களின் பாதுகாப்பு என்பது தனிப்பட்ட விவகாரம். அவா்கள் எடுத்துள்ள இம்முடிவுக்கு வாழ்த்துகள்’ என்றாா்.

ஹாரி-மேகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments