நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்: வலுக்கும் கண்டனங்கள்!
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விமான பயணக் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விமான பயணக் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 95 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெவித்துள்ளது.
இந்தப் பெருவெள்ளத்தில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களும் அடங்குவர். மேலும், நேபாளத்துக்குச் சென்ற தமிழர்கள் 57 பேரும் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நேபாளத்தில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் விமான பயணக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளன. இதற்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பேரிடர் காலத்தில் மக்களின் துயரத்தின் மூலம் லாபம் ஈட்டுவதாக விமான நிறுவனங்கள மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் ராஷ்ட்ரிய பிரஜா தந்திர கட்சியைச் சேர்ந்த எம்பி குஷ்பு ஒலி, விமானக் கட்டண உயர்வு தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், “நமது நாடு ஒரு தேசிய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. இதுபோன்ற சூழலில் குடிமக்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு பதிலாக, உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நெருக்கடி நிலை காலமென்பது மக்களிடம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பல்ல. பேரிடர் காலங்களில், மக்களின் துயரத்தின் மூலம் ஆதாயம் தேடுவதை விடுத்தும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
எனவே, இந்த பேரிடர் காலத்தில் விமானக் கட்டணங்களின் கடுமையான உயர்வைக் கட்டுப்படுத்தி, குடிமக்களுக்குத் தேவையான நிவாரணத்தை வழங்குவதை உறுதி செய்து, அவர்களின் பயணங்களைத் தடையின்றி மேற்கொள்வதை உறுதி செய்வதில் நேபாள அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Many are condemning the manifold hike in airfares at a time when people in Nepal are suffering due to massive floods.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.