FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 148 தமிழர்களின் நிலை என்ன? தேச மங்கையர்கரசி விடியோ வெளியீடு!

நேபாள வெள்ளப் பேரிடரில் சாகா எல்லையில் சிக்கிய 148 தமிழர்கள் பற்றி தேச மங்கையர்கரசி வெளியிட்ட விடியோ..

தேச மங்கையர்கரசி - Insta
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலையில் மானசரோவருக்கு திருக்கையிலாய யாத்திரை சென்றவர்கள் 150 பேர் எல்லையில் சிக்கித் தவிப்பதாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது,

திருக்கையிலாயம் - மானசரோவர் யாத்திரைக்குச் சென்னையிலிருந்து ஆகஸ்ட் 17, 18 என இரண்டு குழுக்களாகப் புறப்பட்டு காத்மாண்டு வந்தடைந்தோம். அதன்பிறகு ஆகஸ்ட் 20ல் சாகா எல்லையைத் தாண்டி, முறையாக அந்தந்த நாள்களில் அங்கங்கு தங்கி கயிலாய யாத்திரையைச் சரியாக மேற்கொண்டு வருகிறோம்.

Advertisement

Advertisement

தற்போது, இரண்டாவது நாள் யாத்திரையை நிறைவுசெய்யும்போதுதான் நேபாளத்தில் நடைபெற்று பேரிடர் துயரச் சம்பவம் தெரியவந்தது. மிகுந்த மனவந்தமடைந்தோம். பல்லாயிரக்கணக்கான நேபாள மக்களும், தமிழகத்திலிருந்து வந்தவர்களும் பாதிப்புக்களாகியுள்ளனர். இதில் பல பேருடைய நிலை என்ன என்பதே தெரியவில்லை.

இந்தப் பயணத்தில் நாங்கள் மொத்தம் 150 பேர் இருக்கிறோம். அதில், 148 தமிழர்கள், 2 வெளிநாட்டினர். சிவபெருமானின் கருனையால் நாங்கள் அனைவரும் பாதுகாப்புடன் சாகா எனும் இடத்தில் இருக்கிறோம்.

இங்கிருந்து நாங்கள் வெளியேறுவதற்கான வழி என்ன என்பது குறித்து நேபாள, இந்திய - சீன அரசுடன் பேசிவருகிறோம். எந்த வழியாக எங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்களோ, அந்த வழியாக நாடு திரும்புவோம். நாடு திரும்பும் முயற்சிகள் அனைத்தும் மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments