FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாளத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் மாயம்! உதவி எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் மாயமானது பற்றி..

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் - ஏபி
பகிர்:

நேபாளத்திற்குச் சென்றிருந்த பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார்.

நேபாள ஆற்றில் ஆக. 26-ம் தேதி காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டவர். 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிம் பேசிய துணை முதல்வர்,

Advertisement

Advertisement

நேபாளத்திற்குச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் காணாமல் போயுள்ளனர். நாங்கள் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறோம்.

நேபாளத்தில் சிக்கித் தவிப்பார்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மூத்த அரசு அதிகாரியும், தேவைப்பட்டால் ஒரு அமைச்சரும் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மேலும், அங்குச் சிக்கியுள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உதவி கோருவதற்காக, பிரத்யேக கட்டணமில்லா உதவி எண் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

நேபாளத்தில் சிக்கித் தவிப்பவர்கள் 1070 அல்லது 0802253707 ஆகிய கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Karnataka Deputy Chief Minister G Parameshwara on Thursday said five people from Bengaluru who had travelled to Nepal are missing and efforts are on to reach them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments