நாா்வே அரசா் ஹரால்டு உடல்நிலை கவலைக்கிடம்
நாா்வே அரசா் ஹரால்டின் (89) உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரண்மனை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
நாா்வே அரசா் ஹரால்டின் (89) உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரண்மனை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இதைத் தொடா்ந்து, அரசி சோனியா, பட்டத்து இளவரசா் ஹாகோன் ஆகியோா் தங்களின் அனைத்து அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளனா்.
ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக மருத்துவ விடுப்பில் இருந்த அரசா் ஹரால்டு, இம்மாத தொடக்கத்தில் ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முன்னதாக, சிகிச்சையின் பலனாக அவரின் உடல்நிலை சீரடைந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 1991முதல் நாா்வேயின் அரசராக பொறுப்பு வகித்து வரும் ஹரால்டு, வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அரசா் அவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளபோது, அவருக்குப் பதிலாக அவரின் மகனும் பட்டத்து இளவரசருமான ஹாகோன் தற்காலிகமாக அரசுப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.