FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்பு

நாா்வே அரசா் ஹரால்டின் (89) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலையில் காலமானார்.

நாா்வே அரசா் ஹரால்டு - AP
பகிர்:

நாா்வே அரசா் ஹரால்டின் (89) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலையில் காலமானார்.

567 ஆண்டுகளில் நார்வேயின் சொந்த மண்ணில் பிறந்த முதல் இளவரசர் ஹரால்டுதான். ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக மருத்துவ விடுப்பில் இருந்த அரசா் ஹரால்டு, இம்மாத தொடக்கத்தில் ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

முன்னதாக, சிகிச்சையின் பலனாக அவரின் உடல்நிலை சீரடைந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி, வெள்ளிக்கிழமை (ஆக. 28) காலை 6.35 மணியளவில் ஹரால்டு உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

கடந்த 1991 முதல் நாா்வேயின் அரசராக பொறுப்பு வகித்து வந்த ஹரால்டு, வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அரசா், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால், அவருக்குப் பதிலாக அவரின் மகனும் பட்டத்து இளவரசருமான ஹாகோன் தற்காலிகமாக அரசுப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், அரசர் ஹரால்டு உயிரிழந்ததால், அவரது மகன் ஹாகோன் அரசராகப் பொறுப்பேற்கிறார்.

பட்டத்து இளவரசர் ஹாகோன் - AP
summary

Norway’s King Harald V dies at 89 and his son becomes King Haakon VIII

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments