பிரிக்ஸ் உச்சி மாநாடு! இந்தியா வந்தார் அபுதாபி பட்டத்து இளவரசர்!
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியா வந்தடைந்தார்...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் தில்லியில் வரும் செப். 12 மற்றும் செப். 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஏராளமான உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தில்லி இன்று (செப். 11) மாலை வந்தடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
தில்லி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தலைமையிலான குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்டோர் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
Abu Dhabi Crown Prince Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan has arrived in India to participate in the BRICS summit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.