சௌதி அரேபியாவின் அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது தொடர் தாக்குதல்: இந்தியா கண்டனம்
சௌதி அரேபியாவின் அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது தொடர் தாக்குதலுக்கு இந்தியா தெரிவித்துள்ள கண்டனம் குறித்து...
சௌதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக சௌதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் விமானி உள்பட12 போ் பலியானதோடு 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொது விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில், பயணிகள் இல்லாத நிலையில் தரையில் நிறுத்தப்பட்டிருந்த சௌதியா நிறுவன விமானம் சேதமடைந்தது. மேலும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பலா் படுகாயமடைந்ததாக சௌதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Advertisement
Advertisement
இந்த தாக்குதலைத் தொடா்ந்து, ரியாத் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 124-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏா் இந்தியா நிறுவனம் ரியாத்துக்கான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இதேபோன்று லுப்தான்சா, பாகிஸ்தான் ஏா்லைன்ஸ் உள்ளிட்ட சா்வதேச விமான நிறுவனங்களும் சேவைகளை ரத்து செய்துள்ளன.
இந்தியா கண்டனம்
கடந்த சில நாட்களாக ரியாத்தில் உள்ள அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது. இதில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலும் அடங்கும். இந்த தாக்குதல்கள் உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தொடர் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சௌதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசுடனும் இந்தியா உறுதுணையாக நிற்பதாகவும், அந்த பகுதியில் அமைதியும் இயல்புநிலையும் விரைவில் திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.
India strongly condemned the repeated attacks on Riyadh’s King Khalid International Airport over the past few days...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.