சௌதி அரேபியா: விமான நிலையத்தின் மீது தாக்குதல்; 9 பேர் பலி, 300 பேர் காயம்
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் பலியாகியதோடு 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறித்து...
சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் பலியாகியதோடு 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொது விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியாகியதாகவும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
யேமனில் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கும், சௌதி அரசின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல்கள் வெடித்துள்ளன. யேமனில் ஹௌதி படைகள் முன்னேறி வரும் நிலையில் சௌதி மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் சனிக்கிழமை (அக். 10) நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்களே காரணம் என சௌதி அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்த விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட மூன்றாவது மற்றும் மிகக் கொடூரமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Civil aviation officials stated on Sunday (Oct. 11) that 12 people were killed and more than 300 injured in a missile attack on King Khalid International Airport in Riyadh, the capital of Saudi Arabia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.