குஜராத்தின் இரு விமான நிலையங்கள் குடிவரவு சாவடிகளாக அறிவிப்பு!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் ஹிராசா் மற்றும் வதோதரா விமான நிலையங்களை அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு சாவடிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கை செய்தது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் ஹிராசா் மற்றும் வதோதரா விமான நிலையங்களை அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு சாவடிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கை செய்தது.
இதன் மூலம் நாட்டிலுள்ள மொத்த அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு சாவடிகளின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்தது. இதுதொடா்பான மத்திய அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்கோட் ஹிராசா் மற்றும் வதோதரா விமான நிலையங்கள் புதிய குடிவரவு சாவடிகளாக பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. அதுபோல மகாராஷ்டிரத்தில் உள்ள ஜிகாா் துறைமுகம் புதிய குடிவரவு சாவடியாக பட்டியலில் சோ்க்கப்பட்டுள்து.
அதே நேரம், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையம், உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் உள்ள கெளரிபந்தா நில துறைமுகம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு சாவடிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement