தீவிரமடையும் மோதல்! சௌதி நகரங்கள் மீது ஹௌதிகள் தொடர் தாக்குதல்!
சௌதி அரேபியாவின் நகரங்களைக் குறிவைத்து ஹௌதிகள் நடத்திய தாக்குதல் குறித்து...

சௌதி அரேபியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஹௌதிகள் நடத்திய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனில், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில், சௌதி அரேபியாவின் மீதும் ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், சௌதியின் தலைநகர் ரியாத் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ஹௌதிகள் இன்று (நவ. 20) 5 ட்ரோன்கள் மற்றும் 1 பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாகவும், அவை அனைத்தும் இடைமறிக்கப்பட்டு தகர்க்கப்பட்டதாகவும், சௌதி தலைமையிலான கூட்டணிப் படைகள் அறிவித்துள்ளன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மேலும் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் 13 அவசரகால எச்சரிக்கைகளை சௌதியின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து ஹௌதிகள் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, யேமனில் ஹௌதிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகள் மீது சௌதி படைகள் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.