சௌதியால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 இந்தியர்கள் மீட்பு! - ஹௌதிகள் அறிவிப்பு!
செங்கடல் பகுதியில் சௌதி படைகளால் தாக்கப்பட்ட இந்திய சொகுசு கப்பலில் இருந்து 14 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஹௌதிகள் அறிவிப்பு...
செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் படைகளால் தாக்கப்பட்ட இந்திய சொகுசு கப்பலில் இருந்து 14 இந்தியர்களை மீட்டுள்ளதாக, யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.
செங்கடலின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை பகுதியில் உள்ள சுகார் தீவின் அருகில் சென்ற இந்திய சொகுசு கப்பல் மீது சௌதி அரேபியாவின் படைகள் இன்று (அக். 22) தாக்குதல் நடத்தியதாக, ஹௌதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த 14 இந்தியர்களையும் ஹௌதி படை மீட்டுள்ளதாகவும், அவர்கள் குறித்த முழுமையான தகவல் பின்னர் வெளியிடப்படும் எனவும் ஹௌதிகளின் செய்தித்தொடர்பாளர் யஹியா சரீ அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து, இந்தியா மற்றும் சௌதி அரேபியா அரசுகளின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இந்தத் தாக்குதலை சௌதி படைகள் நடத்தியதா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, சௌதி அரேபியாவின் தம்மாம் நகரத்தில் உள்ள கிங் ஃபஹத் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நேற்று ஹௌதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த அக்.10 மற்றும் அக்.11 ஆகிய தேதிகளில் ரியாத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான இந்தியர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Yemen's Houthi rebels have announced that they have rescued 14 Indians from an Indian luxury ship that was attacked by Saudi Arabian forces in the Red Sea.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.