FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பதிலடி கொடுக்கும் ஹௌதிகள்! சௌதி தலைநகர் மீதான ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு!

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை குறிவைத்து ஹௌதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு...

யேமன் மீதான சௌதியின் தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தையைத் தூக்கிச் செல்லும் மக்கள்... - ஏபி
பகிர்:

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை குறிவைத்து யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில், சௌதி அரேபியாவின் மீதும் ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ரியாத் நகரத்தைக் குறிவைத்து ஹௌதிகள் இன்று (நவ. 8) நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைத் தங்களின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இடமறித்துத் தகர்த்துள்ளதாக, சௌதி தலைமையிலான கூட்டணிப் படைகள் அறிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இதையடுத்து, சௌதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களைக் குறிவைத்து ஹௌதிகள் ஏவிய ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக, சௌதியின் செய்தித்தொடர்பாளர் ஜெனரல். துர்கி அல்-மாலிக்கி உறுதி செய்துள்ளார்.

முன்னதாக, யேமனின் சனா நகரத்தில் நேற்று சௌதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டதாக, ஹௌதிகள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து சௌதி அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே, சௌதி ஆதரவுடன் செயல்பட்டு வரும் யேமனின் அரசுப்படைகள் ஹௌதிகளுக்கு எதிராக 40,761 ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that missile attacks launched by Yemen’s Houthi rebels, targeting the Saudi Arabian capital, Riyadh, have been thwarted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.