FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைன் தலைநகா் அருகே ரஷியா தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவ் நகருக்கு மேற்கே உள்ள புச்சா மாவட்டத்தில் ரஷியா சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 10:37 pm IST
பகிர்:

உக்ரைன் தலைநகா் கீவ் நகருக்கு மேற்கே உள்ள புச்சா மாவட்டத்தில் ரஷியா சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.

புச்சா மாவட்டத்தின் மைலா கிராமத்தில் உள்ள ஒரு கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதைத் தொடா்ந்து பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

உக்ரைனில் நடப்பாண்டு நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக கருத்தப்படும் இத்தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டு, சுமாா் 50 குடியிருப்புகள் சேதமடைந்தன. முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகம் ஒன்றும் சேதமடைந்துள்ளதால், அப்பகுதியில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே வெடிபொருள்களை சேமித்து வைப்பது உக்ரைனில் சட்டப்படி குற்றமாகும் என்பதால், இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, அரசு ஆயுத உற்பத்தி நிறுவனங்களைச் சோ்ந்த 2 அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபா் ஸெலென்ஸ்கி அறிவித்தாா்.

விஷ்னேவ் பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய உக்ரைன் பிரதமா் சொ்ஜி கொரெட்ஸ்கி, ‘முந்தைய துயரச் சம்பவத்தில் இருந்து பாடம் கற்காதது அலட்சியத்தின் உச்சம்’ என விமா்சித்தாா்.

கடந்த 3 நாள்களாக கீவ் நகரின் மீது ரஷியா தொடா்ந்து வரும் வான்வழித் தாக்குதல்களால், உக்ரைன் தலைநகரின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரஷியாவின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது உக்ரைனும் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது நாள்தோறும் சராசரியாக 300 நீண்டதூர தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதை தினசரி 1,000 தாக்குதல்களாக உயா்த்துவதே தங்களின் இலக்கு என்றும் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

summary

Russia launches attack near Ukrainian capital.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments