உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 27 பேர் பலி!
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டது குறித்து...
உக்ரைனின் தலைநகர் கீவ் அருகிலுள்ள புச்சா மாவட்டத்தின் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் தங்கள் எதிரிகளின் முக்கிய கட்டமைப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கீவ் நகரத்தின் அருகிலுள்ள புச்சா மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் வான்வழித் தாக்குதலில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டதாக, உக்ரைனின் அதிகாரிகள் இன்று (ஆக. 29) அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலில், 50-க்கும் அதிகமான குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீப்பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், மைலா கிராமத்தில் உள்ள கிடங்கு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, உக்ரைனின் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் நோக்கில் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 3 ஆவது நாளாக ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படும் நிலையில் இதுவரை 370 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
27 people were killed in an attack by Russia on the Bucha district near the Ukrainian capital, Kyiv.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.