ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி
ரஷியாவின் நிஷ்னிகாம்ஸ்க் நகரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது பற்றி...
ரஷியாவைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
ரஷியாவின் நிஷ்னிகாம்ஸ்க் நகரில் உள்ள தொழில் மற்றும் பொது சொத்துக்களை இலக்காகக் கொண்டு உக்ரைன் திங்கள்கிழமை பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
மேலும் 39 பேர் காயமடைந்தனர் என்று தாதர்ஸ்தான் பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய மாதங்களில் ரஷியாவின் எண்ணெய் ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் தினமும் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதல்கள் ரஷியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதுடன், ரஷியாவின் சுத்திகரிப்பு திறனைக் குறைத்து, அந்நாட்டு மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது. நிஷ்னிகாம்ஸ்க் நகரம் உக்ரைன் எல்லையில் இருந்து கிழக்கே சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதன் மக்கள் தொகை சுமார் 2,40,000 ஆகும். இந்த நகரம் ஒரு முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகும். இதில் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளும் ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையும் உள்ளன.
A Ukrainian drone attack Monday on the Russian city of Nizhnekamsk killed 12 people and wounded 39 others, authorities in the Tatarstan region said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.