FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கீவ் மீது ரஷியா நடத்திய இரவு நேரத் தாக்குதலில் ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கீவ் மீது ரஷியா சரமாரி தாக்குதல் குறித்து...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:22 am IST
கீவ் நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல் - ஏஎன்ஐ
பகிர்:

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை இரவு ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார், ஐந்து பேர் காயமடைந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

கீவ் நகரில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதாகவும், தாக்குதலுக்கு ரஷியா பயன்படுத்தும் ஆயுத ரகங்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் வருவதாக உக்ரைனிய விமானப்படை அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைனிய தலைநகரில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பிலிருந்தும் எல்லை தாண்டிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தச் சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை, தெற்கு ரஷியாவின் சுற்றுலா நகரமான கெலெண்ட்ஜிக்கில் கடற்கரையில் மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் உக்ரைனிய ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் ஏழு பேர் பலியானதாகவும், பலியானவர்களில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த சம்பவத்தில் 58 பேர் காயமடைந்தனர்; அவர்களில் பலர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆளில்லா விமானத்தின் பாகங்கள் கடற்கரையில் விழுந்தபோது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அந்த ட்ரோன் தானாகவே விழுந்ததா அல்லது ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஸ்கோ பிராந்தியத்தில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் தொழில்துறை பகுதியில் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன; இதில் துணை மின் நிலையம் மற்றும் நிர்வாகக் கட்டடம் சேதமடைந்தன, மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இரு தரப்பிலும் பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்து வருவதால், இந்தத் தாக்குதல்கள் மோதல் மேலும் தீவிரமடைந்து வருவதையே உணர்த்துகின்றன.

summary

At least one person was killed, and five others were injured after Russia launched an overnight attack on Ukraine's capital, Kyiv, late on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments