FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!

மெக்கா நகரின் மீது ஹெளதிகள் தாக்குதல் முயற்சி பற்றி...

16 செப்டம்பர் 2026, 8:46 am IST
மெக்கா மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல் - x
பகிர்:

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா மீது ஹெளதிக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். செளதி அரேபியா, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செளதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் ஆகிய நகரங்கள் மீது ஹெளதி படைகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செளதி அரேபிய பாதுகாப்புப் படையினர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், மெக்காவில் தெற்கே ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹெளதி படைகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்காரணமாக எச்சரிக்கை ஓசை எழுப்பப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல செளதி ராணுவம் அறிவுறுத்தியது.

எனினும், ஹெளதிகள் ஏவிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் நடு வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக செளதி ராணுவம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் செளதி ராணுவம் விடுத்திருந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மெக்கா நகரின் மீதான தாக்குதலால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

summary

Houthis launch drone and missile attack on Mecca!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments