25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்!
இன்னமும் தொடரும் துயரம் என்று 9/11 குற்றவாளிகளின் குடியிருப்பு வளாக மேலாளர் கூறுகிறார்.
குற்றவாளிகளுக்கு வாடகைக்கு வீடு கொடுத்ததால், தான் இன்னமும் பிரச்னைகளை சந்தித்து வருவதாக, அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் மேலாளர் கூறியிருக்கிறார்.
கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரில் உள்ள அந்த குடியிருப்பு வளாகத்தின் மேலாளரான ஹோலி ராட்ச்ஃபோர்ட், 9/11 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்து உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த ஒமர் அல்-பயூமியுடனான தனது சந்திப்புகள் குறித்து முதன்முறையாகப் பொதுவெளியில் பேசியுள்ளார்.
ஹோலி ராட்ஸ்ஃபோர்ட் என்ற பெண், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனக்கு அறிமுகமான ஒமர் அல்-பயூமி நல்ல நண்பர், ஆனால், அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஒன்றிணைக்கவே என்னால் இன்னமும்கூட முடியவில்லை. அவர் தன்னைப் பற்றி என்னிடம் சொன்னதையும், அவரது உண்மையான முகத்தையும் என்னால் இன்னமும் தொடர்புபடுத்தவே முடியவில்லை.
Advertisement
Advertisement
பயூமி, கடந்த 1999ஆம் ஆண்டு பார்க்வூட் குடியிருப்புக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அப்போது முதல் தன்னுடன் நல்ல நட்புறவு இருந்துள்ளது. அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் நல்ல நண்பராக இருப்பார் என்று ராட்ஸ்போர்டுடன் கூறினார்.
வீடு தேடுவதாக 2000ஆவது ஆண்டு பிப்ரவரியில் அவர் நவாஸ், காலித் என இரண்டு பேரை அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். அவர்களால் குடியிருப்பு வளாகத்தின் கட்டணத் தொகையை செலுத்த முடியாத நிலையில் இருந்த போது, பயோமிதான், அவர்களுக்காக கையெழுத்திட்டு வங்கிக் கணக்குகளை தொடக்கிக் கொடுத்தார்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்க பயணிகள் விமானத்தைக் கடத்தி இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்திய 19 அல்-கய்தா பயங்கரவாதிகளில் இவர்கள் இருவரும் அடங்குவர். இவர்கள் அமெரிக்க ஏர்லைன் விமானத்தைக் கடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
அவர்கள் குடியிருப்பில் இருந்த போது சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. வழக்கமாகவே காணப்பட்டார்கள். மிகவும் அமைதியாக இருந்தார்கள் என்கிறார் ராட்ஸ்போர்டு.
இது தொடர்பாக இவரும் பல கட்ட விசாரணைகளை சந்தித்துள்ளார். பிறகு, பயோமி, பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய பிரமாணப் பத்திரத்தையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மூன்று பேருடைய நட்பு, கடந்த 25 ஆண்டுகளாக தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.