அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கமேனி அழைப்பு
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளது குறித்து...
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப். 28 -ல் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையிலான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாமிய நாடுகளின் பிரச்னைகளுக்கான தீர்வு என்பது ஒத்த கருத்து, நட்பு, நன்மையின் பாதையில் ஒத்துழைப்பு ஆகியவையே.
தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ அறியாமலோ முஸ்லிம்களிடையே பிளவையும் மோதலையும் ஏற்படுத்தும் எவராக இருப்பினும், அவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளாகவே கருதப்படுகிறார்.
ஆகையால், உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அவர்களின் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
Iran Supreme Leader Mojtaba Khamenei calls for unity among Muslim countries
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.