போராட்டக்காரர்கள் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்!
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளது குறித்து...
ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஈரானில் நிலவும் பணமதிப்பிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 2025 டிசம்பர் முதல் மாபெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்களில், ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசுப் படைகளின் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், ஈரான் அரசுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் நிறைவு நாள் ஈரானில் இன்று (பிப். 11) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், நாடு தழுவிய போராட்டங்களாலும் அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பேசுகையில் ஈரான் அரசின் படைகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதை நேரடியாக ஒப்புக்கொள்ளாமல், போராட்டாத்தால் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்கள் அறிவோம் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
“மக்கள் முன் நாங்கள் வெட்கப்படுகிறோம். மேலும், இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் மக்களுடன் மோதலை கோரவில்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Iranian President Masoud Pezeshkian has publicly apologized for the harsh measures taken against people who protested against the government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.